Breaking

Thursday, 27 August 2020

இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: அண்ணா பல்கலைக் கழகம்

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமெஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகள் தவிர, பிற ஆண்டு செமெஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி தேர்வுகள் ரத்தாகி, மாணவர்களின் ரிசல்ட்களும் வெளியிடப்பட்டன. பாடம் நடத்தாமல் இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் எப்படி தேர்வு எழுத முடியும் என கேள்விகள் எழுந்த நிலையில், 8 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், கொரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாததால் செமெஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வை ரத்து செய்ய யுஜிசி மறுப்பு தெரிவித்து விட்டது. இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்வு நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்ட நீதிபதிகள் மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், யுஜிசி வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாக தேர்வா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment