
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஆன்லைன் மூலமாக உயர்கல்வி சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், கடந்த வருடத்தை காட்டிலும், இந்த வருடத்தில் அதிக சேர்க்கைகள் பதிவாகும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகளில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், இன்று (15 ஜூலை 2020) மாலை முதல் ஆன்லைன் பதிவு மூலம் துவங்க உள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை (www.tneaonline.org) மாணவர்கள் பதிவு செய்யலாம்.

தமிழகம் முழுவதும் 52 மையங்கள் சான்றிதழ் சரிபார்க்க அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அலைபேசியிலேயே வசதியும் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கைகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். கல்லூரிகள் திறப்பது அல்லது வகுப்புகள் தொடக்கம் தொடர்பாக முதல்வர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்திற்கு பதில் இன்னும் வரவில்லை.
No comments:
Post a Comment