
கொரோனா பரவல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் மாணவர்கள் விண்ணப்பங்களை நேரடியாக வாங்க அதிக அளவில் வருவார்கள் என்பதால் தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்ப விநியோக முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
வரும் 20ஆம் தேதி முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோக முறை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சில தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர்களுக்கு நேரடி விண்ணப்பங்களை விநியோகம் செயவதாக வந்த புகார் வந்தது.
இதனையடுத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் விண்ணப்ப விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வருகின்ற 20 ம் தேதி முதல் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பங்களை வழங்க வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment