Breaking

Thursday, 16 July 2020

மறுதேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது?


தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில் தமிழ்நாடு பாடத்தில் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 7,79,931 பேர் எழுதினர். அதில், மாணவிகள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் தேர்வு எழுதினர்.

கொரோனா வைரஸ் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் தேர்வு எழுதியவர்களில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்வு எழுதியவர்களில் மாணவியர் 94.80 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவர்கள் 89.41 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவர்களைவிட மாணவிகள் 5.39 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கணிதப் பாடப்பிரிவில் அதிகபட்சமாக 96.31 சதவீதம் பேரும், உயிரியல் பாடப் பிரிவில் 96.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வுகளான வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் (புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம்) பாடத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

27.07.2020 அன்று நடைபெறவுள்ள +2 மறு தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு மட்டும், மறுதேர்வு முடிவடைந்த பின், தேர்வெழுதிய பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்த தேதியில் அந்த தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment