Breaking

Wednesday, 15 July 2020

ஊரடங்கிலும் கல்வி பணிகள் விறுவிறு! 'ஆன்லைன்' வகுப்பில் பாடம் துவங்கியது


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பாடப்புத்தக வினியோகம் அனைத்து பள்ளிகளிலும் நேற்று துவங்கியது.கொரோனா ஊரடங்கிலும் கல்வி சார்ந்த செயல்பாடுகள் பாதிக்காத வகையில், பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களை வீட்டிலேயே கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் அவசியம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், அவர்களுக்கான பாடப்புத்தகங்களை வினியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்கீழ், திருப்பூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பாடப்புத்தக வினியோகம் நேற்று முதல் துவங்கியது.

பாதுகாப்பு கருதி, ஆசிரியர்கள் கையுறை அணிந்தபடி பாடப்புத்தகங்களை வினியோகம் செய்தனர்.மாணவர்கள், பெற்றோர்கள் எந்த நேரத்தில் பள்ளிக்கு வந்து புத்தகங்களை பெற வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிவித்ததால், சமூக இடைவெளியுடன் புத்தகங்களை வாங்கி சென்றனர்.

ஆன்லைன் வகுப்பு நவீன கற்றல் முறையின் வளர்ச்சியாக, தொலைக்காட்சி வழியே பாடங்களை கற்கும், 'ஆன்லைன்' கல்வி வகுப்பும், பள்ளி கல்வித்துறையின், 'கல்வி தொலைக்காட்சி'யில் நேற்று முதல் துவங்கியது. காலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை ஒளிப்பரப்பாகும் பாட அட்டவணைகள் வெளியாகியுள்ளன.

காலை, 6:00 - 8:00 மணி வரை நீட் மாணவர்களுக்கான வகுப்பும், தொடர்ந்து, இரவு, 7:00 மணி வரை பிற வகுப்புகளுக்கான பாடங்களும், இரவு, 11:00 வரை 'நீட்' பயிற்சியும் அளிக்கப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment