Breaking

Wednesday, 22 July 2020

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்!


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 54 பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்றுமுன்தினம் தொடங்கியது. ஊரடங்கால் நேரில் சென்று விண்ணப்பிக்க இயலாத சூழலைக் கருத்தில் கொண்டு, நடப்பு கல்வியாண்டு முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவு தொடங்கி 24 மணி நேரத்தில், மாநிலம் முழுவதும் 89 ஆயிரத்து 538 மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கிய 15-ம் தேதி முதல் தற்போது வரை 80,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்காக நேற்று ஒரே நாளில் 89 ஆயிரத்து 538 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment