
தமிழகத்தில் முதல் முறையாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் வரும் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறுகையில், தமிழகத்தில் இன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு விண்ணப்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார்நிலையில் உள்ளதாக கூறினார். இன்ஜினீயரிங் கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
மேலும், அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்கவேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும்.
பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org மாணவர்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்யலாம். தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளன , மொத்த இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று வரும் 20ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதுபாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கலை,அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், http://tngasa.in மற்றும் http://tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம் அதேபோன்று, தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு http://tngptc.in,http://tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment