
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அவசர அவசரமாக வெளியிட்டது ஏன் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு மழுப்பலான பதிலை செங்கோட்டையன் கூறிச் சென்றார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் விடைதத்தாள்கள் திருத்தப்பட்டும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது.
பிளஸ் 2 கடைசி தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதால் அந்த தேர்வு முடிந்த இரண்டு மூன்று நாளில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடைசி தேர்வு எழுதாதவர்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் ரிசல்ட் வெளியானது. இதனால் பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

தேர்வு முடிவு அவசர அவசரமாக வெளியிட்டது ஏன் என்று புரியவில்லை. தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து ஈரோட்டில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தேர்வு முடிவு வெளியிட்டது நல்லதா, கெட்டதா” என்று மழுப்பலான பதிலை கூறிச் சென்றார். எப்படியோ ரிசல்ட் வந்ததில் எல்லோருக்கும் திருப்திதான்.
No comments:
Post a Comment