10ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் செப்டம்பர் 16 முதல் 28-ம் தேதிவரை நடைபெறது. இந்தத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் என அனைத்தும் முடிந்த நிலையில் தற்பொழுது தேர்வு முடிவு தேதி குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வருகின்ற 19ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தேர்வர்களும், தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
𝓜𝓸𝓷𝓲𝓬𝓪.𝓖
ReplyDelete8306547
ReplyDelete02011980
ReplyDelete