தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து செப். 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. காலதாமதம், கற்றல் இடைவெளி, ஆன்லைன் கல்வி காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன
மேலும் இந்த குறைபாடுகளை போக்கும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ், இல்லம் தேடி கல்வி திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. . இந்நிலையில், இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்ட பாடத் திட்டங்களின் அடிப்படையில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவதை பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். 10ம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும்.
12ம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல் – தாவரவியல், உயிரியல் – விலங்கியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வரலாறு, புவியியல் பாடங்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment