Breaking

Thursday, 10 June 2021

ஜூன் 21-ல் தொடங்குகிறது சென்னை பல்கலை. தேர்வுகள்

சென்னை பல்கலைக்கழகத்தின் நடப்பு பருவத் தேர்வுகள் ஜூன் 21ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போன பருவத் தேர்வுகள் ஜூன் 21ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை ஜூன் 14ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தேர்வு இணையதளம் மூலம் 3 மணிநேரம் நடைபெறும் எனவும், இதற்கான அனுமதி சீட்டு ஜூன் 15 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment