Breaking

Monday, 17 August 2020

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி! மகிழ்ச்சியுடன் மதிப்பெண் சான்றிதழ் வாங்கிச்சென்ற மாணவிகள்!


கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 27ல் நடக்கவிருந்த இறுதி தேர்வுகள் ரத்தானது. பள்ளியில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி இணையதளத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, பத்தாம் வகுப்பில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று (17.08.2020) துவங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்றிதழை வாங்கி சென்றனர்.

No comments:

Post a Comment