Breaking

Thursday, 27 August 2020

2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட அருந்ததியினருக்கு 3 சதவிதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட அருந்ததியினருக்கு 3 சதவிதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 2009ல் அருந்ததியினருக்கு திமுக அரசு 3% உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி!!

2009ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு பட்டியலின பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே இடஒதுக்கீடு முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட, ரிட் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மற்றும் சரவணகுமார் தாக்கல் செய்த மனுக்களை, உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என யசோதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.

மாநில அரசுக்கு உரிமை உண்டு என தீர்ப்பு

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி அருண்மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், 'அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.பட்டியல் இனத்துக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவிதம் உள்ஒதுக்கீடு செல்லும். பட்டியலின பிரிவினர் இடையே உள் ஒதுக்கீடு வழங்கும் வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது. வழக்கை விரிவாக விசாரிப்பதற்காக 7 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கும்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment