1. ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி’ இத்தொடரில்
‘நிரந்தரம்‘ என்பதன் பொருள்.
அ. எப்பொழுதும்
ஆ. காலம் முழுமையும்
இ. அழியாத ஒன்று
ஈ. இவற்றுள் எதுவுமில்லை
2. ‘ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி’ இத்தொடரில்
‘வைப்பு‘ என்பதன் பொருள்.
அ. நிலப்பகுதி
ஆ. வைப்புத்தொகை
இ. வைத்தல்
ஈ. இவற்றுள் எதுவுமில்லை
3. ‘வண்மொழி வாழியவே’ இத்தொடரில் ‘வண்மொழி‘ என்பதன்
பொருள்.
அ. வலிமையான மொழி
ஆ. வளமிக்க மொழி
இ. அழியாத மொழி
ஈ. இளமையான மொழி
4. பாரதியார் குறித்து பொருந்தாத ஒன்றைத் தேர்வு
செய்க.
அ. விடுதலைப் போராட்ட
வீரர்
ஆ. சமுகச் சீர்த்திருத்தச்
சிந்தனையாளர்
இ. இதழாளர்
ஈ. பேச்சாளர்
5. கீழ்க்கண்டவற்றுள் பாரதியாரை, பாவேந்தர் புகழாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ. சிந்துக்குத்
தந்தை
ஆ. செந்தமிழ்த்
தேனீ
இ. புதிய அறம்பாட
வந்த அறிஞன்
ஈ. புதுமைக் கவிஞர்
6. ‘செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்,
நந்தா விளக்கனைய நாயகியே’ என்ற அடிகளைக் கொண்ட நூல்.
அ. முத்தமிழ் அந்தாதி
ஆ. செந்தமிழ் அந்தாதி
இ. பைந்தமிழ் அந்தாதி
ஈ. தமிழ்மொழி அந்தாதி
6. ‘செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்,
நந்தா விளக்கனைய நாயகியே’ என்று பாடியவர்.
அ. பாரதியார்
ஆ. து. அரங்கன்
இ. பாரதிதாசன்
ஈ. செந்தமிழ் அந்தணர்
7. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ. கடல்
ஆ. பரவை
இ. ஆழி
ஈ. வைப்பு
8. கீழ்வருவனவற்றுள் பாரதியார் குறித்து, சரியன கூற்று
அல்லாத ஒன்றைக் கண்டறிக.
அ. இந்தியா, விஜயா, குயில்
முதலான இதழ்களை நடத்தினார்
ஆ. சந்திரிகையின்
கதை, தராசு என்பன உரைநடை நூல்கள்.
இ. மறம் பாட வந்த
மறவன் என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர்
ஈ. வசன கவிதையின்
தந்தை பாரதியார்.
9.
பாரதியார் நடத்திய இதழின் பெயர்.
அ. நறுமலர்
ஆ. குயில்
இ. விஜயா
ஈ. இவற்றுள் எதுவுமில்லை
10.
பாரதியாரின் வசன கவிதைக்கு வித்திட்ட நூல்.
அ. புல்லின் இதழ்கள்
ஆ. காட்சி
இ. நகரம்
ஈ. குடியாட்சி
No comments:
Post a Comment