தேவையில்லாமல் ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று போக்குவரத்து போலீசாருக்கு டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாகன தணிக்கை, வாகன சோதனை உள்ளிட்ட பணிகளின்போது அதிகம் பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதுபோதாது என்று போலீசார் சில இடங்களில் திடீரென வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர். இதனால், அவசரமாக அலுவலகம் செல்வோர் அல்லது வேறு பணிக்கு செல்பவர்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில், இதுபோன்று வாகன சோதனைகளுக்கு கர்நாடக டிஜிபி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கர்நாடக மாநில காவல்துறை டிஜிபி-யாக இருந்து வருபவர் பிரவீன்சூட். இவருக்கு ட்விட்டர் மூலமாக பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் வாஜபேயம் என்பவர் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், பெங்களூரு போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராக நீங்கள் (அதாவது டி.ஜி.பி. பிரவீன்சூட்) இருந்த போது, நகரில் தேவையில்லாமல் வாகனங்ளை தடுத்து நிறுத்தி ஆவணங்களை பரிசோதனை செய்யக்கூடாது என்று கூறியிருந்தீர்கள். தற்போது நீங்கள் கர்நாடக மாநில டிஜிபியாக உள்ளீர்கள். இதற்கு முன்பு நீங்கள் பெங்களூருவில் பிறப்பித்திருந்த உத்தரவை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதுபற்றி உங்களது கருத்தை தெரிவிக்கும்படியும் ஸ்ரீவஸ்தவ் கூறியிருந்தார்.
இதற்கு, டிஜிபி பிரவீன் சூட் ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார். "பெங்களூருவில் தேவையில்லாமல் ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். டிஜிபி-யின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவசரமாக அல்லது அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும்போது காவல்துறையினர் வேண்டுமென்றே ஆவணங்கள் சரிபார்ப்பு எனக்கூறி அலைக்கழிப்பதாகவும், முன்விரோதம் உள்ளவர் என்றால் போலீசார் இதனை சாக்காக வைத்து பழிவாங்குவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில், டிஜிபி பிரவீன் சூட் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment